காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு அடையாளம் கானப்பட்ட பிரதேசங்களில் இன்று காலை புதன்கிழமை டெங்கு பரிசோதனைகள் மற்றும் டெங்கு விழிப்புனர்வு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
டெங்கு விழிப்புனர்வு வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி அஜித் பிரசன்னா, உட்பட பொலிஸ் அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் தொண்டர் அமைப்பைச்சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு அடையாளம் காணப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள அஷ்ஷஹதா வீதி, மற்றும் சாவிய்யா வீதி, ஊர்வீதி செயினுலாப்தீன் வீதி ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் பொது இடங்கள், காணிகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் பொதுமக்களுக்கான டெங்கு விழிப்புனர்வும் செய்யப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தில் காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்களான றஹ்மத்துல்லா, நிதுசன், சங்கர், புலேந்திரன், மற்றும் ஆரயம்பதி பிரதேச பொதுச்சுகாதார பரிசோதர்களான பசீர், ரவிதர்மா, கிருபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.