மட்டக்களப்பு மாவட்டத்தில் சிசு மரண வீதம் குறைவாகும்- பிராந்திய சுகாதார பணிப்பாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிசு மரண வீதம் குறைவாகும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணி;ப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணி;ப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த டாக்டர் சதுர்முகம் தேசிய ரீதியாக சிசு மரணம் மற்றும் தாய் மரணம் என்பவற்றை ஒப்பிடும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இது மிகவும் குறைவாகும்.

தொற்;றும் நோய் மற்றும் தொற்றா நோய் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் விழிப்புனர்வு வேலைத்திட்டங்களை சுகாதார திணைக்களம் மேற் கொண்டுவருகின்றது.

இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டிலுள்ளதுடன் டெங்கு நோய்க்கு எதிரான வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மந்த போசாக்குள்ள மாணவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய சுகாதார நிலைமை தொடர்பாகவும் அதிலுள்ள குறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அதை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணி;ப்பாளர் டாக்டர் எஸ்.முருகானந்தன், மற்றும் புற்றுநோய் வைத்திய நிபுனர் டாக்டர் பார்த்தீபன், வைத்தியர்களான டாக்டர் சுந்தரேசன், டாக்டர் திருக்குமரன், டாக்டர் கடம்பநாதன் உட்பட வைத்தியர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.