காத்தான்குடியில் 46 பேருக்கு டெங்கு –சுகாதார வைத்திய அதிகாரி

ஏம்.எஸ்.நூர்

காத்தான்குடி பிரதேசத்தில் இவ்வாண்டின் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஜுன் மாதம் வரைக்கும் 46 பேருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.


காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர்வீதி, மற்றும் ஸாவிய்யா வீதி, உள்ளிட்ட பகுதிகளிலேயே இதில் கூடுதலானோருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டதாக டாக்டர் நசிர்தீன் குறி;ப்பிட்டார்.

இந்த பிரதேசங்களில் தற்போது டெங்கு பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் விழிப்புனர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறி;ப்பிட்டார்.

டெங்குக்கு எதிரக மருந்துகள் விசிறபட்டுள்ளதுடன் பொது இடங்கள், பாடசாலைகள் என்பனவும் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

டெங்கு பரிசோதணையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசார் ஆகியோர் ஈடுபட்டு வருவதாகவும் டெங்கை பரப்பு வதற்கு காரணமாக இருப்பவர்கள் மீது இவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.