இலங்கை நிருவாகசேவையின் முதலாம் தரம் சிறப்பு தரத்தினைக் கொண்ட இவர், ஆரம்பக்கல்வியினை ஹட்டனிலும், உயர் கல்வியினை மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசியப் பாடசாலையிலும், முதலாவது முகாமைத்துவப்பட்டத்தினை யாழ் பல்கலைக்கழகத்திலும், கல்வி டிப்ளோமாவை திறந்த பல்கலைக்கழகத்திலும், முகாமைத்துவ முதுமாணிப்பட்டத்தினை றுகுணு பல்கலைக்கழகத்திலும் கற்ற இவர், மேலும் பல கற்கைகளையும் நிறைவு செய்தவராவார்.
இலங்கை நிருவாக சேவையில், 90ஆம்ஆண்டு இணைந்து கொண்ட இவர், திருகோமலை மாவட்டத்தின் தம்பலகாமம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 வருடங்களாக போரதீவுப்பற்று, மண்முனை மேற்கு, கோரளைப்பற்று தெற்கு, உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரீவுகளிலும் கடமையாற்றியுள்ளார்.
பின்னர் நுவரெலியா மாநகர சபை ஆணையாளராக 2002-2003 ஆண்டுகளில் பதவி வகித்து, 2004ல் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாராக கடமையாற்றியுளார்.
பின்னர் அரசியலமைப்பு, மறு சீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகக்கடமையாற்றிய இவர், கண்டி மாவட்டத்தின் தலாதா மாளிகை அமைந்துள்ள தெல்தோட்ட பிரதேச செ லயகத்தின் பிரதேச செயலாளராக 2006 முதல் 2011வரை பதவி வகித்துள்ளார்.
பின்னர் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகமாக 2011ஆண்டு பணியாற்றியுள்ளார். அதே நேரம் 2012ஆம் ஆண்டு வட மாகாண உள்ளுராட்சி அமைச்சின் சௌலாளர், அரச வள முயற்சியாண்மை அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








