கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சரியான பாதையைக் குழப்புவதற்கும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் தொடர்ந்து முயன்று வருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மாலை கல்லூரியின் விவேகானந்தா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழா கல்லூரியின் அதிபர் எஸ்.டி. முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி,பிரதி பணிப்பாளர் கோகுலரமணன்,ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.விநாயகமூர்த்தி குருக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின்போது கல்வியிலும் கலை, விளையாட்டு போன்ற துறைகளிலும் சாதனை படைத்த மாணவிகளுக்குப் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் உறுப்பினர்கள்,பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரபு,
பாடசாலைகளில் சிறந்த பாடத்திட்டங்களை முன்னெடுத்து, அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். தேசிய மற்றும் மாகாண அரசாங்கங்களின் இணைப்பில் புதிய கல்விச் சீரமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக தரம் 1 மற்றும் தரம் 2 வகுப்புகளுக்கு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கு முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலங்களில் இத்துறைக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வரவு செலவுத் திட்டங்களில் கல்விக்கான நிதி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் கல்வித்துறைக்கான முன்னுரிமை தொடர்ந்து உறுதி செய்யப்படும். மேலும், பாடசாலையின் கட்டிட நிர்மாணங்கள், மண்டபக் குறைபாடுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு முற்றாக எதிராகச் செயல்பட்டு வருகிறது. கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தினர்.
ஆனால், தற்போதைய அரசு அதற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சரியான பாதையைக் குழப்புவதற்கும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
நாட்டில் ஊழல் மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கும், பாதாள உலகச் செயல்பாடுகள் மற்றும் ஆயுதக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் மிகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வன்முறைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து தண்டனை வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னரே இத்தகைய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
பாதாள உலகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த விசேட சட்ட வரைவுகள் மற்றும் பிஎஸ்ரிஏ போன்ற சட்ட முன்னெடுப்புகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதோடு, எந்தவொரு நிரபராதியும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு மிகக் கவனமாக உள்ளது.
.jpeg)
.jpeg)
.jpeg)





.jpeg)

.jpeg)






.jpeg)

.jpeg)
