மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இருவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அண்ணாத்துரை முன்னிலையில் நடைபெற்ற இன்றைய வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன்போது , வழக்கின் 3ம் சந்தேக நபரான சி.சந்திரகாந்தன் ( பிள்ளையானை) வெலிசர கடற்படை முகாம் சிறைச்சாலையில் இருந்து நிகழ்நிலை மூலம் ழுடெiநெ மூலம் ஆயர்ப்படுத்தப்பட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் மன்றில் ஆஜராகவில்லை. இதேவேளை வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 23ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
