மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், MEDSCOPE-II அங்குரார்ப்பண நிகழ்வு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் இன்று (28) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, பிள்ளையாரடியில் அமைந்துள்ள பேராசிரியர் வரகுணம் நினைவு கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 28 திகதி முதல் 31 திகதி வரை 4 நாட்கள் நடைபெறவுள்ளது.
மருத்துவத் துறையையும் படைப்பாற்றலையும் இணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வு, சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் 20 ஆண்டுகால கல்வி மற்றும் வளர்ச்சிப் பயணத்தைக் கொண்டாடும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.
