சர்வதேசப் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற மட்டக்களப்பு மாணவன்!


இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தனிநபர் சதுரங்கப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஒக்டோபர் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அனுராதபுரத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாகாண மட்டப் போட்டிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இப்போட்டியில் Under 6 பிரிவில் பங்கேற்ற மட்/மெதடிஸ்த கல்லூரி மாணவனான V. Rudrakshyith, 7 போட்டிகளில் 5 புள்ளிகளைப் பெற்று Merit பெறுபேற்றினைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இவர் மட்டக்களப்பில் இயங்கி வரும் Singing Fish Chess Clubஇல் சதுரங்கப் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.