கார் மோதியதில் நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (19) மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதியில் வைத்து நேற்று இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஆயித்தியமலை, மணிபுரம் எனும் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கந்தசாமி லவக்குமார் என்பவரே மரணமடைந்துள்ளார்.
ஆயித்தியமலை பகுதியில் இருந்து செங்கலடிக்கு வந்த நபர் அங்கிருந்து கொழும்புக்குச் செல்ல பஸ் தரிப்பிடத்துக்குச் பாதசாரி கடவையூடாகா வீதியை குறுக்கறுத்துச் செல்லும் போதே ஏறாவூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற காரில் மோதுண்டுள்ளார்.
இவ்வாறு விபத்துக்குள்ளான நபர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றார்.
