காத்தான்குடியில் இடி, மின்னல் தாக்கியதில் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள முத்துவாப்பா லேனில் அமைந்துள்ள இரண்டு வீடுகளும் இடி, மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இடி, மின்னல் தாக்கத்தினால் வீடுகளின் சில பகுதிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத்தின் பணிப்புரைக்கு அமைவாக, காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.என். நஜ்மி, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜரூப் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவு கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று சேத விபரங்களைப் பார்வையிட்டதுடன்இ பாதிப்புகள் தொடர்பான தகவல்களையும் சேகரித்தனர்.
