நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக நீர் விநியோகச் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்துள்ள தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு சபை தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
