அம்பாறை மாவட்டத்தில் YMC அமைப்பினால் நடத்தப்பட்ட 45th National Youth Award Competition – 2026 நடனப்போட்டியில், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவிகள் மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
மாணவிகளின் இந்த வெற்றியானது பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.
இந்நடன ஆற்றுகையைச் சிறப்பாக நெறிப்படுத்தி, மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணர்வதில் பங்களிப்புச் செய்த திருமதி சு. விஜயசாந்தன் ஆசிரியருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவிகள், தேசிய மட்டத்திலும் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
