நாட்டிலே ரோஹண விஜேவீர உட்பட அந்த பயங்கரவாதிகளுக்கு சிலையும் அமைத்து, அரச அனுசரணையுடன், அரச தலைவருடைய பங்களிப்புடன், பங்கேற்புடன் நிகழ்வு நடத்தலாம் என்று சொன்னால், அகிம்சை வழியிலே தன்னுடைய உயிரை அமைதி வழியிலே தியாகம் செய்த தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு, அந்த அமைதியான போராட்டத்திலே ஈடுபட்டவர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதிலே என்ன தவறு இருக்கின்றது? என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலே நல்லூரிலே நடந்த அந்த மோசமான செயல்பாட்டை இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த நாங்கள் மிகவும் வன்மையாக நாங்கள் கண்டிக்கின்றோம்.
அதுமட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து அந்த பிழையான செயலை செய்தது மட்டுமில்லாமல், அந்த செயலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்லிஇ குழந்தைகள் பேசுவது போல பேசி, இன்னும் அந்த செய்த பிழையான செயலை தமிழ் மக்கள் மத்தியிலே இன்னும் ஒரு தங்களை வெளிப்படுத்தும் செயல்பாடாகவே இது பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
மிக முக்கியமாக இந்த விடயம் சம்பந்தமாக குறுகிய அரசியல் லாபம் தேடும் சில தரப்பினரும் இருக்கின்றார்கள். அதாவது அனைவருக்கும் தெரிந்த விடயம், இந்த சிலை அந்த இடத்திலிருந்து அகற்றியது ஸ்ரீலங்கா பொலிஸ் என்றது எல்லாருக்கும் தெரியும்.
இது சம்பந்தமாக போலியான குற்றச்சாட்டுகளை பரப்பும் சில தரப்பினர், சிலநேரம் மாநகரசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியாது. மாநகரசபைக்கு பொலிஸ் அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை.
சில தரப்பினர், இலங்கை அரசு அநுர அரசு செய்கிற இந்த கேவலமான செயல்பாட்டை திசைதிருப்பி, இது சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியிலே பிழையான கருத்துக்களை விதைப்பது முயற்சிக்கிறது, அதையும் விட மோசமான செயலா இருக்கு.
நீங்கள் சிலையை அகற்றியது மோசமான விடயம், சிலையை அகற்றிப்போட்டு சிலையை அகற்றியது நாங்கள் தான் என்று சொல்றதுக்கு முதுகெலும்பில்லாத ஆட்களாக நீங்கள் இன்று இருக்கிறீர்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்த காலப்பகுதியிலே பார்வதி அம்மாவுக்கு, வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவுக்கு அவருடைய பேரிலே துறைமுகம் அமைப்போம் என்று சொன்னவர்கள் அந்த பாடலிலே. கடந்த ஆண்டு சிலருடைய விருப்பத்தையும் மீறி அந்த இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியவர்கள், இன்று நாங்கள் தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு ஒரு அஞ்சலி நிகழ்வு ஒன்றைச் செய்தால், முகநூல் முழுவதும் என்னுடைய முகநூலிலே அதை பதிவு செய்ததற்கு பார்த்தால், பேரினவாத சிங்கள தரப்பினர் அவருடைய அந்த வெளிப்படுத்துற கருத்துக்களை பார்க்கும்பொழுது இந்த நாட்டிலே இன்னும் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு ஒரு அங்குலம் கூட நாங்கள் நெருங்கவில்லை என்று தெளிவாக தெரிகின்றது.
சொல்றது முழுதும் மிகவும் ஒரு வன்மத்தைக் கக்கும், வன்முறையைத் தூண்டும் வகையான பதிவுகள் என்னுடைய முகநூல் கணக்கிலே தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக போடப்படுகின்றது.
ரோஹண விஜேவீர என்ற பயங்கரவாதிக்கு ஜனாதிபதி தலைமையிலே அஞ்சலி நடத்தப்படுகின்றது. எங்களுடைய போராட்டமானது தமிழினத்தினுடைய விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டமே தவிர, அவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி எவரும் கூறுவதல்ல. அது வேற வேற இடங்களில் பலர் வேற வேற கருத்தில் சொல்லலாம். ஆனால் இந்த நாட்டிலே ரோஹண விஜேவீர உட்பட அந்த பயங்கரவாதிகளுக்கு சிலையும் அமைத்து, அரச அனுசரணையுடன், அரச தலைவருடைய பங்களிப்புடன், பங்கேற்புடன் நிகழ்வு நடத்தலாம் என்று சொல்லி சொன்னால், அகிம்சை வழியிலே தன்னுடைய உயிரை அமைதி வழியிலே தியாகம் செய்த தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு, அந்த அமைதியான போராட்டத்திலே ஈடுபட்டவர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதிலே என்ன தவறு இருக்கின்றது? இதனைப் பற்றி கேட்டால் எங்களையும் பிழையானவர்களாக காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள்.
அந்த வகையிலே இந்த விடயம் சம்பந்தமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓரணியாக நின்று இந்த மோசமான செயல்பாட்டை, இந்த சிலையை அகற்றிய மோசமான செயல்பாட்டை நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மிக வன்மையாக நாங்கள் எங்களுடைய கண்டனங்களை இன்று மட்டக்களப்பிலே இருந்து நாங்கள் முன்வைக்கின்றோம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்,
