அடக்குமுறையைப் பிரயோகித்துவிட்டீர்கள். உங்களுக்கு எமது மக்கள் அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். அனுரகுமாரவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்று அந்த சிலை அகற்றப்பட்டதால் வடகிழக்கு முழுக்க தமிழ் மக்கள் திரண்டிருக்கிறார்கள். எங்களினுடைய ஒற்றுமையை, தமிழ் தேசியத்தின் மீது, மாவீரர்களின் மீது, தியாக தீபத்தினுடைய கொள்கை மீது எமது மக்கள் எவ்வளவு தூரம் உறுதுணையாக, உறுதியாக இருக்கிறார்கள் என்பது இன்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவித்த அவர்,
விடுதலைப் புலிகளினுடைய கட்டுப்பாட்டில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் இருந்த காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளால் சிங்கள பௌத்த மக்களுக்குச் சொந்தமான எந்தவொரு ஜனநாயக ரீதியானதோ அல்லது அகிம்சை ரீதியானதோமான அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கவில்லை.
பொத்துவிலில் தொடக்கம் பொலிகண்டி வரை, அம்பாறையில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை சிங்கள பௌத்த மக்களினுடைய ஜனநாயக ரீதியான, அகிம்சை ரீதியான அடையாளங்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் பாதுகாத்து வந்திருந்தார்கள். அவற்றை மதித்திருந்தார்கள்.
ஆனால், ஜனநாயக முகம் காட்டி தமிழ் மக்களையும் அரவணைப்பதாக ஒரு வேடம் போட்டு, வடகிழக்கிலே தமிழ் மக்களினுடைய வாக்குகளைச் சூறையாடி ஆட்சிப்பீடமேறிய அனுர அரசினுடைய உண்மை முகம் அம்பலமாகி இருக்கிறது.
தியாகத்தினுடைய வடிவமான அண்ணன் திலீபனுடைய சிலையை அகற்றித் தங்களுடைய உண்மையான சிங்கள பௌத்த இனவாதத்தினுடைய கோர முகத்தை அனுரகுமார திசாநாயக்காவும் அடிவருடிகளும் உலகத்துக்கும் மக்களுக்கும் காட்டியிருக்கிறார்கள்.
இந்த இடத்திலே நாங்கள் இந்த சிங்கள பௌத்த அனுரகுமாரவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்று அந்த சிலை அகற்றப்பட்டதால் வடகிழக்கு முழுக்க தமிழ் மக்கள் திரண்டிருக்கிறார்கள்.
எங்களினுடைய ஒற்றுமையை, தமிழ் தேசியத்தின் மீது, மாவீரர்களின் மீது, தியாக தீபத்தினுடைய கொள்கை மீது எமது மக்கள் எவ்வளவு தூரம் உறுதுணையாக, உறுதியாக இருக்கிறார்கள் என்பது இன்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு வடகிழக்கங்கும், யாழ்ப்பாணம் தொட்டு அம்பாறை வரை ஒரே நேரத்தில் போராட்டம் நடக்கிறது. நாங்கள் இன்று மட்டக்களப்பின் தலைநகரத்திலே, மட்டக்களப்பின் மையத்திலே நின்று போராடிக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் தியாக தீபத்தினுடைய சிலை அகற்றப்பட்டமையைக் கண்டிப்பதற்காக.
அவருடைய கொள்கையை நாங்கள் ஏற்றுநிற்க்கின்றோம். இந்த அனுரகுமாரவுக்கும் அடிவருடிகளுக்கும் நாங்கள் கூறுகின்ற செய்தி என்னவென்றால், அகிம்சையில் கை வைத்துவிட்டீர்கள். அடக்குமுறையைப் பிரயோகித்துவிட்டீர்கள். உங்களுக்கு எமது மக்கள் அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.
நீங்கள் எவ்வாறு சிலையை அகற்றினீர்களோ, அதேபோல் எமது மக்கள் வடக்கு கிழக்கிலிருந்து உங்களை அடியோடு அகற்றி விரட்டுவார்கள்.
இந்த இடத்திலே நாங்கள் ஒரு செய்தியைக் கூற விரும்புகின்றோம்; தியாக தீபத்தினுடைய சிலை அகற்றி வைக்கப்பட்ட இடத்திலே வைக்கப்படுகின்ற வரை போராட்டம் தொடரும். பார்த்திபன் கனவு பலிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும். நன்றி."
.jpeg)