மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா உட்பட ஆறு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் -டாக்டர் சுகுணன் தாக்கல்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியாக்கப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத் தூண்டும் கூற்றுக்களுக்கு எதிராகவும் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமல்படுத்தப்பட்ட ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வைத்தியர் அர்ஜுனா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹாரீஸ் உள்ளிட்ட 6 நபர்களுக்கு எதிராகவும், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 2 சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்த தகவலின்படி, தடையாணை அல்லது நிபந்தனையுடன்கூடிய கட்டளை பிறப்பிப்பது தொடர்பில் பரிசீலிப்பதற்காக இவ்வழக்கின் மீதான முடிவு வரும் செப்டம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது டாக்டர் சுகுணன் சார்பில் சட்டதரணிகளான டயஸ்,க.கிஸோபனாஆகியோர் ஆஜராகியிருந்தனர்.