போரதீவுப்பற்றில் பலத்த மழை - மின்சார கம்பத்தில் விழுந்த தென்னை மரத்தினால் மின்தடை,உடனடியாக சீர் செய்த களுவாஞ்சிகுடி மின்சார சபை.!


மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று 37ஆம் கிராமம் நெல்லிக்காடு கூழாவடி வீதியில் நேற்று (02.08.2026) ஆம் திகதி இரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக அப்பகுதியில் இருந்த தென்னை மரம் ஒன்று மின்சார கம்பம் மற்றும் வயர்களின் மேல் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் மின்சார வயர்கள் அறுந்து விழுந்து, அப்பகுதி முழுவதும் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று (03.08.2026)ஆம் திகதி காலை சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த களுவாஞ்சிகுடி மின்சார சபை ஊழியர்கள், மின்சாரக் கம்பத்தில் சிக்கியிருந்த மரங்களை அகற்றி, அறுந்து விழுந்த வயர்களைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களது விரைவான நடவடிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், இன்று (03.08.2026) நாள் முழுவதும் போரதீவுப்பற்றுப் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.