புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தொழிற்பயிற்சி.


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திட்குட்பட்ட அக்கரைப்பற்று 7/4 கிராம சேவையாளர் பிரிவில்  புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளிட்ட சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தும்புத்தடி மற்றும் ஈர்க்குத்தடி தயாரிக்கும் பயிற்சி நெறி (20) வியாழக்கிழமை நடைபெற்றது.

விதாதா வளநிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி நெறி, குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் M. முருகுநாதன், கள ஒருங்கிணைப்பாளர் A. நிஸார், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான G. தயாபரன் மற்றும் K. செல்வானந்தம், திருமதி ஷியாமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன், சக்தி மகளிர் சங்கத் தலைவி சாந்தி லோகேஸ்வரன் செயலாளர் திருமதி தீ. நிஷாகரி  உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்களுக்கு தும்புத்தடி மற்றும் ஈர்க்குத்தடி தயாரிக்கும் நடைமுறைத் திறன்கள் வழங்கப்பட்டதுடன், இத்தொழிலை சுயதொழிலாக முன்னெடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.