மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 216.77 கி.மீ. நீளத்தைக் கொண்ட அளவிலான மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வாறே ஆண்டிற்கான செயற்றிட்டத் திட்டத்தின் கீழ் மின்வேலிகளை அமைப்பதற்காக 85.4 கி.மீ. வேலி நிர்மாணிப்புக்காக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பொருளாதாரம்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகள், மனித உயிர்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளன.இந்த சேதங்கள் மற்றும் இழப்புக்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2026 ஆண்டில் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 216.77 கி.மீ. நீளத்தைக் கொண்ட அளவிலான மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வாறே இம்மாவட்டத்தினுள் 2026 ஆண்டிற்கான செயற்றிட்டத் திட்டத்தின் கீழ் மின்வேலிகளை அமைப்பதற்காக 85.4 கி.மீ. வேலி நிர்மாணிப்புக்காக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளின் பராமரிப்புக்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 136 உத்தியோகத்தர்களும், 131 பல்வேறு அபிவிருத்தி உதவியாளர்கள் மூலம் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காட்டு யானைகள் மனித மோதலைத் தடுப்பதற்காக தேசிய மின்வேலிகளை அமைக்கும் நாடளாவிய ரீதியிலான நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காட்டு யானைகளின் குடியிருப்புக்களுக்கும் நிலங்களுக்கும் உட்பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக தற்போது உள்ள மின்வேலித் தொகுதிக்கு மேலதிகமாக உள்ள மின்வேலித் தொகுதியினை நீளமாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
வனவிலங்கு வலையங்களில் காட்டு யானைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பயிர்ச் சேதங்களைக் குறைப்பதற்கும் நாளாந்தம் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கைகளுக்காகவும் யானை வெடிகளைக் கொள்வனவு செய்து பகிர்ந்தளிப்பதற்காகச் செயலாற்றுகின்றது.காட்டு யானைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற உயிர்ச் சேதங்கள், சொத்துச் சேதங்களுக்கான நட்டஈட்டினைச் செலுத்துவதற்குச் செயலாற்றுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 216 .77 கிலோமீற்றர் தூரம் அளவிலான யானை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு வேலிகளை உடைத்துத் தரைமட்டமாக்கி குடியிறுப்புக்கள் மற்றும் பயிர் நிலங்களுக்குள் காட்டு யானைகள் உள்நுழைகின்றன.
வன வாழ்க்கைக்கு காட்டு யானைகளினால் ஏற்படுகின்ற தாக்கங்களைக் குறைப்பதற்காக மின்வேலிகளை வெற்றிகரமான மூலோபாய உபகரணமொன்றாக இனங்காணப்பட்டிருந்தாலும் சில காட்டு யானைகள் மின்வேலிகளை தகர்த்துவிட்டு கிராமங்களுக்குள் நுழையும் சாத்தியமொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
மின்வேலிகள் எனும் காட்டு யானைகளுக்கு உளவியல் ரீதியான தடையொன்று என்பதேயன்றி,அது பகுதிக்கான தடையொன்றாக செயற்படுவதில்லை. அக்காரணத்தின் அடிப்படையில் மின்வேலிகளைத் தகர்த்து வீழ்த்துவதற்காக பழகிய காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதற்கு முடியுமாக உள்ளதோடு, அதன் பக்க விளைவொன்றாக எதிர்பாராத நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுவதற்கு இடமுள்ளது.
இதனைத் தடுப்பதற்காக இந்த வருடத்தில் மேலதிக யானை தடுப்பு வேலிகளை நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.2026 ஆண்டிற்காக 85.4 கி.மீ. நீளத்தைக் கொண்ட மின்வேலிகளை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ஐந்து வட்டார வன அலுவலகங்களை தாபிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தினுள் வட்டார வன அலுவலகங்கள் 3 நிறுவப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் தற்போது நிறுவப்பட்டுள்ள அவ்வலுவலகங்களின் எண்ணிக்கை போதுமானதாகும்.மட்டக்களப்பு மாவட்டத்தினுள் 12 உப வன அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, அவ்வலுவலகங்களின் எண்ணிக்கை போதுமானதாகும் என்றார்.
