கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் பலி!


கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து சிறுவன் ஒருவன், உயிரிழந்துள்ளதாக மருதானைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14 மாடிகளைக் கொண்ட குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் சேர்ந்து சுற்றியுள்ள பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இந்த சிறுவன் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு முன்னெடுத்து வருகின்றனர்.