பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற  பிள்ளையானை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்து கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ் கைதான பிள்ளையான் இன்று (24) நிகழ்நிலை ஊடாக மட்டக்களப்பு நீதிமன்ற விசாரணைக்காக ஆஜரானபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.