வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடமொன்றில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் உள்ள கழிவு கொட்டும் தளத்திற்கு வழமையாக குப்பைகளை கொட்டச் சென்ற பிரதேச சபை ஊழியர்கள், யானை ஒன்று அசைய முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், யானையை உயிருடன் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்.
குப்பை மேடுகளைக் கடந்து யானை இருந்த இடத்தை சென்றடைந்த போது, அது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் யானையின் உடலை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.




