மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பேருலாவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பேருலாவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று வியாழக்கிழமை (7) இரவு வயல்பகுதில் வைத்து கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த வயல் பகுதியில் உள்ள கொட்டகையை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான சிறிய ரக துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 விவசாயி ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை (8) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.