வீடு ஒன்றிலிருந்து சடலம் மீட்பு!

தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் யாய 05, ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

தம்புத்தேகம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.