கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்துத் துறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, வீச்சுகல்முனை வீதி தொடக்கம் வலையறவு பாலம் வரையான வீதியை இரட்டை வழிப் பாதையாக (Dual Carriageway) மேம்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பிராந்தியத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மக்களின் பயணப் பொழுதைக் மிச்சப்படுத்தும் நோக்கில் இந்த வீதி அபிவிருத்தித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 1280 மீட்டர் (1.28 கிலோமீட்டர்) நீளமுள்ள இந்த வீதிப் பகுதி முழுமையாக இரட்டை வழிச் சாலையாக மாற்றப்பட்டு, நவீன முறையில் காப்பட் (Carpeted/Asphalt) இடப்பட்டு புனரமைக்கப்படவுள்ளது.
இப்பாரிய உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக மாகாண சபையினால் 45 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் வீதி அகலப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வீதி நவீனமயமாக்கப்படவுள்ளது.
இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும் போது, வீச்சுகல்முனை மற்றும் வலையரவுப் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து இலகுவடைவதுடன், இப்பகுதியின் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் பெருமளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பொதுமக்களுக்கான பாதுகாப்பான, சுமுகமான போக்குவரத்துச் சேவை இதன் மூலம் உறுதிசெய்யப்படும் என பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்.






