திருகோணமலை - தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (20) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தம்பலாகாமம் பகுதியில் பயணித்த கெப் (Cab) வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.





