மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கு உட்பட்ட தாண்டியடி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய இரண்டு மாடி கட்டத்திற்கான கட்டிடபணிகள் கிழக்கு மாகாண ஆளுநரால் அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.
2026 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண நிதியின் கீழ் 35 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய இரண்டு மாடி வகுப்பறைகளுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குமாகண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு என பலரும் கலந்து கொண்டனர்.
மிக பின்தங்கிய பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பல்வேறு பட்ட உள் கட்டுமான வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கபட்டு வருகின்றது.






