சுனாமி அனர்த்தம் நடைபெற்று 21வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்த இரத்ததான நிகழ்வு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்ப திருச்செந்தூர் ஆரம்ப சுகாதார நிலையில் இன்று காலை இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு மற்றும் மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் இணைந்து ஏற்பாடுசெய்த இந்த இரத்ததான நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் 231வது இராணுவ பிரிவின் அதிகாரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய நிகழ்வில் பெருமளவான இளைஞர் யுவதிகள் வருகைதந்து இரத்ததானம் வழங்கியதுடன் இரத்ததானம் வழங்கியவர்களுக்கு நினைவாக மரக்கன்று ஒன்றும் வழங்கப்பட்டது.