ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

அனர்த்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய கொழும்பு foundation of goodness அமைப்பின் மூலம் சுமார் 300 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் (24) வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான செ.நிலாந்தன், பிரதேச சபை உறுப்பினர் உதயராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் இணைப்பாளர் நிலக்சன், foundation of goodness அமைப்பின் ஏறாவூர் பற்று சித்தாண்டி கிளையின் நிர்வாக செயற்பாட்டாள ர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் கோகுலன், தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.
நிவாரண பொதிகளை வழங்குவதற்கு முன் நின்று செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மற்றும் நிவாரண பொதிகளை வழங்கி வைத்த foundation of goodness அமைப்பினர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் ஆகியோருக்கு பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் அவர்கள் ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி மக்கள் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்தார்.