மட்டக்களப்பு பிள்ளையாரடி அருள்மிகு ஸ்ரீ புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் நாளை சனிக்கிழமை மஹா சனீஸ்வரர் ஹோமம்

மட்டக்களப்பு பிள்ளையாரடி அருள்மிகு ஸ்ரீ புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் நாளை சனிக்கிழமை மஹா சனீஸ்வரர் ஹோமம் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.தற்போது புரட்டாதி சனி விரம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் சனீஸ்வர தோஷம் நீங்கப்பெறும் வகையில் இந்த ஹோமம் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர்தெரிவித்தனர்.

நாளைய தினம் காலை 08மணி தொடக்கம் இந்த ஹோமம் நடைபெறவுள்ள நிலையில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை தினம் காலை தொடக்கம் அபிசேகம் மற்றும் ஹோமம் நடைபெறவுள்ளதுடன் எள்ளு எரிப்போருக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.