மாற்று திறனாளிகளின் மரணச் சடங்குகளை நடத்துவதற்கான உதவிகள் வழங்கிவைப்பு!


மாற்று திறனாளிகளின் குடும்பங்களில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடத்துவதற்கான கூடாரம், கதிரைகள், சமையல் பாத்திரங்களை சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் வழங்கி வைத்தார்.மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஏர்முனை மாற்றுத் திறனாளிகள் அமைப்பில் உள்ள 854 குடும்பங்களில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடத்துவதற்கான இருபதுக்கு பத்தடி கொண்ட கூடாரம், 125 கதிரைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நான்கு இலட்சத்தி நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் (445000/-) பெறுமதியான பொருட்கள் செங்கலடி சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக  சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ நிலாந்தன் அவர்களினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள துளிர் அமைப்பின் நிதி உதவியின் கீழ்  மேற்படி உதவி வழங்கும் நிகழ்வு இன்றைய (09/10/2025) தினம் வந்தாறுமூலையில் நடைபெற்றது. 

இன் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன், சேவகம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் , சமூக சேவகரும் முன்னாள் பி.சபை உறுப்பினருமான என்.மோகனராஜ், சமூக சேவகரும் செங்கலடி ஈஸ்டர் மருந்தக உரிமையாளர் திருமதி.சர்மினி உதயகுமார் , பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் இணைப்பாளர் நிலக்சன்,செங்கலடி வர்த்தக சங்க தலைவர் ஜெகன் ஆகியோருடன் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருப்தனர். 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட செங்கலடி வர்த்தக சங்க பொருளாளரும் சமூக சேவகருமான என். மோகன்ராஜ் அவர்கள் இதுவரை காலமும் மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை செய்வதற்காக மாதாந்தம் வழங்கி வந்த ஐயாயிரம் ரூபாய் நன்கொடையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் பத்தாயிரம் வழங்குவதாகவும், மற்றும் மாற்று திறனாளிகளிள்  தின நிகழ்வுகள் விளையாட்டு நிகழ்வுகளுக்கான பரிசு பொருட்களை வாங்கி தருவதாகவும் கூறினார். 

அதேபோல் செங்கலடி ஈஸ்டன் மருந்தகம் மற்றும் மெடிக்கல் உரிமையாளர் திருமதி சர்மினி உதயகுமார் அவர்களினால் இதுவரை காலமும் மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை செய்வதற்காக மாதாந்தம் வழங்கி வந்த பத்தாயிரம் ரூபாய் நன்கொடையை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இருபதாயிரம் ரூபாய் வழங்குவதாகவும், மாற்று திறனாளிகளின் சுகவீனம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஆற்றுப்படுத்தல் மருத்துவ முகமை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார். மேலும் சர்மினி உதயகுமார் 900 மாற்றுத்திறனாளிகளுக்கான   “Bedsheets”  வழங்குவதாகவும் உறுதியளித்தார். 
செங்கலடி வர்த்தக சங்க தலைவர் திரு.ஜெகன் மாதாந்தம் 5ஆயிரம் ரூபா பணம் மாற்றுத்திறனாளின் சங்கத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.