மட்டக்களப்பு மாவட்ட விசேட அறிவிப்பு குளு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று பழைய மாவட்ட செயலகத்தில் நடை பெற்று வருகின்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல் வேறு விடையங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருக்கின்றது. விசேடமாக மயிலத்ததமடுஇ மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலே ஆராயப்பட்டது இது தொடர்பில் விரிவாக ஆராயபட்டதுடன் மகாவலி அதிகாரசபையுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களை அதன்போது முன்னெடுத்தார் அதன் அடிப்படையில் குறித்த பகுதியில் 1570 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததோடு அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை முன்னெடுப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.ஏனைய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.


.jpeg)

