மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினால் உருவாக்கப்பட்ட OneGov முன்னரங்க அலுவலக கணனி முறைமையானது இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேலும் மாவட்ட செயலக அலுவலக நடைமுறையினை இலகுபடுத்தும் முறையில் மனித வளமுகாமைத்துவம், கடித முகாமைத்துவ முறைமை, கையிருப்பு முகாமைத்துவ முறைமை, கணனி உதவிச்சேவை, மாவட்ட செயலக மாநாட்டு மண்டப முன்பதிச் சேவை போன்ற இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட பல சேவைகள் ஆரம்பித்தித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூப ரஞ்ஜினி முகுந்தன் (காணி), பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன், பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பால் தொழில்நுட்ப உதவி பணிப்பாளர் எம்.எம்.எம். சிந்தா முபாஸ், உயர் அதிகாரிகள், மைக்ரோசொப்ற் நிறுவனத்தின் பயிற்சியாளர்களின் ஆசிய பிராந்திய தலைவர் எம்.விக்னராஜ், தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.