செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணிகள் சம்பியன்களாக தெரிவு


35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஏறாவூர்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி  மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.ஏறாவூரப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பா.கிஸ்கந்தமுதலி தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் 07 ஆண்கள் அணிகளுயும் 04 மகளீர் அணிகளும் கலந்துகொண்டன.
இறுதிப்போட்டியில் மகளீர்  கழகம் சார்பில் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணியும் ஆண்கள் கழகம் சார்பில் களுவன்கேணி பாரதி இளைஞர் களக அணியும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன. 

இறுதிப்போட்டியில் மகளீர்  கழகம் சார்பில் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் செங்கலடி மஞ்சள் தாரகை  இளைஞர் கழகங்களிடையே நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செங்கலடி மஞ்சள் தாரகை இளைஞர் கழக  அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வழங்கப்பட்ட 30 பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்றது. 

பதிலுக்குத் துடுப்பெத்தாடிய செங்கலடி மஞ்சள் தாரகை இளைஞர் கழக  அணி 04 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஓட்டங்களின் அடிப்படையில் 06 ஓட்டங்களால் செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வெற்றி பெற்று 2025ம் ஆண்டின் சம்பியபனது.

இறுதிப்போட்டியில் ஆண்கள் கழகம் சார்பில் களுவன்கேணி பாரதி இளைஞர் களக அணியும் ஆறுமுகத்தான்குடியிருப்பு வள்ளுவன் இளைஞர் கழக அணியும் மோதின இதில் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.