பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய 04.02.2025 அன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம் பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாற்குடபவனியானது ஆரையம்பதி செல்வாநகர் சிவன் ஆலயத்திலிருந்து பிரதான வீதியினூடாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்தது.

சங்காபிஷேக கிரியைகள் யாவும் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு வேதாகம குருமணி கிரியா ஜோதி சாமஸ்ரீ தேசமான்ய சிவஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
 
சங்காபிஷேக கிரியைகளின் போது உதவிக் குருக்களாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய குரு சைவ நன்மணி சிவஸ்ரீ ஜெ.ஜெய்ப்பிரதாபன் சர்மா அவர்களும் ஆரையம்பதி வைத்தியசாலை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய குரு சிவஸ்ரீ செ.சிந்துஜன் ஐயா அவர்களும் பங்கேற்றனர்.

சங்காபிஷேக கிரியைகள் யாவும் நிறைவுற்றதும் ஆலய நிருவாகத்தினரால் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.