மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பெரிய கல்லாறு ஓடைக்கரை வீதியினை புனரமைத்து தரும்படி அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்று (09) களவிஜயம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, குறித்த ஓடைக்கரை பகுதியில் வசிக்கின்ற மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களின் ஒப்புதலோடு வீதியினை அமைப்பதற்கு மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் சபையூடாக செய்து தருவதாக உறுதியளித்தார்.
இந்தகளவிஜயத்தில் ம.தெ.எ.பற்று தவிசாளர் மே.வினோராஜ், கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர், காணிப்பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர் மற்றும் பெரிய கல்லாறு கழகங்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.