இச்சிரமதானமானது பிள்ளையாரடி தொடக்கம் மாநகர சபை எல்லை தன்னாமுனை வரைக்கும் (3முஅ) மேற்கொள்ளப்பட்டதுடன், வீதியின் இரு மருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பொருட்கள் மற்றும் ஏனைய கழிவுகள் என்பன அகற்றப்பட்டன.
மேலும், மட்டக்களப்பு மாநகரினை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டியது பொதுமக்கள் ஆகிய அனைவரினதும் கடமையாகும். இது போன்ற கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட எடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் திரு.என்.தனஞ்ஜெயன் அவர்கள் தெரிவித்தார்.