மட்டக்களப்பில் உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு- கொழும்பு வீதி, பொத்தானை பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயம் அடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அறுவடை செய்யும் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, காவத்தமுனை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான, இளம் குடும்பஸ்தர் அச்சி முகம்மட் பரீட் (வயது 33) என்பவரே இதன்போது சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.