மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் கழக தினம் இன்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் பெரியகல்லாறு பகுதிகளில் பல்வேறு சமூக சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை முன்னெடுத்துவருகின்றது.
கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 19வது கழகதினமாக பெரியகல்லாறு மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை கோலாகலமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்திரம் வினேராஜ், பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
பிரதம அதிதியாக பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்;த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வண்ணக்கர் எஸ்.கனகசுந்தரம்,பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம்,வடபத்திரகாளியம்மன் ஆலய தலைவர் சி.பேரின்பராஜா உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் மற்றும் கௌரவிக்கப்படுவோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து கழக உறுப்பினர்களின் வருடாந்த கழக உறுதிமொழியெடுக்கும் நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்த நிகழ்வின்போது ஐந்தாம் தரபுலமைப்பரிசில் பரீட்சை,சாதாரணதரம்,உயர்தரம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்களும் சாதனைகளை வெளிப்படுத்திவரும் இளைஞர் யுவதிகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் விசேடமாக கலாபூசனம் விருதுபெற்ற பெரியகல்லாற்றினை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரவீந்திரன் விருது வழங்கிகௌரவிக்கப்பட்டார்.
இதன்போது மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருந்ததுடன் பல்வேறு கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)




.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
