மட்டக்களப்பிற்கு கிழக்காக 780 கி.மீ. தொலைவில் காற்றுச் சுழற்சி


தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மட்டக்களப்பிற்கு கிழக்காக 780 கி.மீ. தொலைவில் காற்றுச் சுழற்சி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் உருவாகுகின்றது.

இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 12.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- நாகமுத்து பிரதீபராஜா -