மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணிகள் தனியார் பஸ் வண்டி மீது காட்டு யானை தாக்குதல்


கிரான் நிருபர் 

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணிகள் தனியார் பஸ் வண்டி மீது காட்டு யானை தாக்குதல் பஸ் வண்டிக்கு சேதம்.

திருகோணமலையஅலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது ஒட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் வைத்து நேற்று இரவு 28/01 காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
 
திருமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்து கொண்டியிருக்கையில் தியாவட்டவான் பகுதியில் யானை கூட்டத்தினை கண்டதும் பஸ் வண்டியினை நிறுத்தியுள்ளார் அதன்போதே யானை பஸ் வண்டி முன் பக்கம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
 
இதன் போது பஸ் வண்டியில் பயணித்த எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.