தரம் 5ஆம் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


மட்டக்களப்பு கல்குடா  வலயத்துக்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில்  தரம் 5ஆம் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு இடம்பெற்றது.
 தரம்  ஐந்து  புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும்  வாழ்த்தி கௌரவித்து நினைவு சின்னம் வழங்கும்  நிகழ்வு இன்று எதிர்கால கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில் ஆரம்ப பாடசாலையில் அதன்  பகுதி தலைவர் மு.யோகநாதன் தலைமையில்  நடைபெற்றது .  
 நீண்ட காலமாக இப் பாடசாலை புலமை பரீச்சையில் மாணவர்கள் சித்தி அடைவு  மட்டம் இல்லாமையினால்  அதனை சவாலாக ஏற்றுக் கொண்டு கிண்ணையடி  எதிர்கால கல்வி சமூகத்தினர் குறித்த பாடசாலை  அதிபர் மற்றும் ஆசிரியர்களையும், வகுப்பு மாணவர்களையும், அவர்களது  பெற்றோர்களையும் ஐந்தாம் தர புலமை பரீச்சை தொடர்பாக கலந்துரையாடி
 பிரத்தியேக வகுப்புகளையும் புலம்பெயர் நாட்டில் வாழும் திரு.யுவராஜன் அவர்களின் நிதி பங்களிப்பில் எதிர்கால கல்வி சமூகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயல் திட்டத்தினால் இப் பாடசாலையில் 93 வீத சித்திகளை பெற முடிந்ததுடன் பாடசாலையில் இருந்து நன்கு மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்று சித்தி அடைய வைத்துள்ளார் மேலும்   நான்கு மாணவர்களின் சித்தியானது இப் பாடசாலையில்  இதுவே முதல் தடவையாக இடம் பெற்றுள்ளது .
இந் நிகழ்வில் பாடசாலை பகுதி தலைவர், ஆசிரியர்கள் மற்றும்  திருமதி யுவராஜன்,   மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், எதிர்கால கல்வி சமூகத்தின்  உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.