தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் நிகழ்வு


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு மட்டக்களப்பு மக்களினால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 55498 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தினைப்பெற்றுக்கொண்டது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட கந்தசாமி பிரபு 14856 வாக்குகளைப்பெற்று இம்முறை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
பெருமளவான ஆதரவாளர்கள் புடைசூழ பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பிரபு அவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார்.
இதன்போது பெருமளவான கட்சி ஆதரவாளர்கள் குழுமியிருந்ததை காணமுடிந்தது.