இதன் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான சமைத்த உணவுகளை வழங்குனர்களின் தரவுகளை சேகரித்தல் மற்றும் மீளாய்வு தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டத்தினை ஏனைய வலயங்களிலும் வலுப்படுத்துவதற்கு வீட்டுத்தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பான மீளாய்வும் இதன் போது இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உலக உணவு திட்ட அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.