இராஜாங்க மைச்சர் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பு


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த 4 திகதி முதல் இன்று 11 திகதி வரை வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை தலைமை வேட்பாளராக கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக தேசிய கூட்டணி நிராகரிக்கப்பட்டுள்ளதாக முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்திலேயே முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை தலைமை வேட்பாளராக கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக தேசிய கூட்டணியும் மேலும் 6 சுயேட்சைக்குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் போட்டியிட்ட கட்சியின் வேட்புமனுவில் உள்ளடங்கும் சத்தியக் கடதாசியில்  கையெப்பமிடப்படாதமையே குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.