பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நடந்த விசேட கலந்துரையாடலில் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோசடிகள் மற்றும் விசேட குற்றச் செயல்கள் தொடர்பான பொலிசாரின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, உயர் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றனர். விசாரணைகளின் தற்போதைய நிலை, தற்காலிக நிறுத்தங்கள், அரசியல் காரணங்கள், விசாரணைகளின் தாமதம் போன்ற விஷயங்கள் கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக இருந்தன.
புதிதாக ஆரம்பிக்க வேண்டிய விசாரணைகள் மற்றும் முன்னதாக தாமதம் ஏற்பட்ட விசாரணைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கலந்துரையாடலின் முடிவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.