குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்க பெற்றோர்களுக்கு சுகாதாரப் பிரிவு வேண்டுகோள்


இந்த நாட்களில் இன்ஃப்ளூயன்ஸா நோய் மற்றும் கை கால் மற்றும் வாய் நோய் (Hand,Foot and Mouth Disease) குழந்தைகளில் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதாரத் பிரிவு தெரிவித்துள்ளது.இந்நிலையில் இவ்வாறான அறிகுறிகளை கொண்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிப்பது மிகவும் முக்கியம் எனவும் பெற்றோர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு தரப்படுத்தும் வகையில் சுகாதாரத் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துவிட்டு சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இந்த நோய்களை தடுப்பதற்கு அதனை கவனமாக செயல்படுத்த வேண்டும் என்றும் எச்சரித்தார்.