மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடிய குற்றச்சாட்டின் பேரில் வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கைது நடவடிக்கை நேற்று (11) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் வாட் ஒன்றின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா ஒன்றை சம்பவ தினமான வியாழக்கிழமை (10) இரவு அங்கு கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவர் கழற்றியமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனை அவதானித்த வைத்தியசாலை நிர்வாக பணிப்பாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.