மட்டக்களப்பு கிரானில் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலின் தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
இன்று காலை ஜனாதிபதி வேட்பாளர் ரணிலினை ஆதரிக்கும் கூட்டம் கிரானில் நடைபெற்றுவருகின்றது.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஏற்பாட்டில் ஜனாதிபதியை ஆதரிக்கும் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் கைத்துப்பாக்கி ரவைகளுடன் நுழைந்த வாகரை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் சந்திவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
0000000000000000
(இதுவொரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)
(இதுவொரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)