நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சஜித் பிரேமதாசவின் முக்கியத்துவம் - கூறுகின்றார்கள் அமைப்பாளர்கள்

இந்த நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சஜித் பிரேமதாசவின் முக்கியத்துவம் இன்று அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டுள்ளதாக ஆரையம்பதி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான த.தயானந்தன் தெரிவித்தார்.

செங்கலடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பரப்புரையின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராகயிருந்துகொண்டு எந்த அரசியல் தலைவர்களும் முன்னெடுக்காத அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வனேந்திரன் சுரேந்திரன் இதன்போது தெரிவித்தார்.