களுவாஞ்சிக்குடி சுகாதார பணிமனைக்குட்பட்ட பெரிய கல்லாறு பிரதேச வைத்தியசாலையில் இன்று புதிதாக புனரமைக்கப்பட்ட வெளி நோயாளர்கள் பிரிவு மற்றும் சிறுவர் பூங்கா என்பன அடங்கலாக ஐந்து பிரிபுகள் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது. பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஞா.சஞ்சே அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிமணையின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களும் மற்றும் களுவாஞ்சிக்குடியின் சுகாதார பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் அ.உதயசூரியா அவர்களும் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் ஆர்.ருதேசன் அவர்களும் கலந்து கொன்டனர்.
பெரியகல்லாறு வைத்தியசாலை கொரோனா காலங்களில் கொரோனா புனர்வாள்வு நிலைமாக இயங்கி வந்த வைத்திய கட்டிடங்களை இன்று கிராம பொது மக்களின் நிதி பங்களிப்புடனும் பெரியகல்லாறு இளைஞர்களின் அயராது உழைப்பினாலும் பெரிய கல்லாறு கிராமத்தில் பிறந்து சேவையாற்றி அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகாத்தமாக சில பிரிவுகள் திறதுவய்கபட்டது.
அவசர சிகிச்சை பிரிவினை அமரதுவம் அடைந்த டாக்டர்.சுந்தரலிங்கம் பல்வைத்திய நிபுனர்தவர்களின் ஞாபகாத்மாக மட்டகளப்பு மாவட்ட சுகாதார பணிமனையின் வைத்தியஅதிகாரி டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களும்,
டாக்டர் தங்கவடிவேல் மகபேற்று வைத்திய நிபுனர் அவர்களின் ஞாபகாத்தமாக உருவாக்கபட்ட சிறுவர் பூங்காவினை வைத்திசாலையின் வைத்திய அதிகாரி் டாக்டர் ஞா.சஞ்சய் அவர்களும்,
பேராசிரியர் டாக்டர் ப.அப்பாபிள்ளை அவர்களின் ஞாபகாத்தமாக உருவாக்கபட்ட Clinic unit இனை டாக்டர் ஆர்.ருதேசன் அவர்களும் மற்றும்
அமரத்துவம் அடைந்த சத்திரசிகிச்சை நிபுனர் டாக்டர்.ஆறுமுகம் அவர்களின் ஞாபகாத்தமாக உருவாக்க பட்ட வெளிநோயாளர் பிரிவு களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார பணிமனையின் பனிப்பாளர் டாக்டர் அ.உதயசூரியா அவர்களும் திறந்து வைத்தார்கள்
இந்த நிகழ்வின் போது வைத்தியசாலையின் புனர்நிர்மான வேலைகளுக்கு உதவி புரிந்தவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிமணையின் பணிப்பாளர் அவர்களின்னால் நன்றி கடிதம் வழங்கப்பட்டதுடன்!
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.மூரளீஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது
இந்த நிகள்விற்கு மத குருமார்கள் மற்றும் ஆலயங்களின் தலைவர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்து இருந்தார்கள்.